நீங்கள் கேட்டவை: மூடாக்கினால் மூன்று விதமான பலன்கள்!

புறாபாண்டி

‘‘சம்பங்கி மலர்ச் சாகுபடி செய்துள்ளோம். நிலத்தில் களைகள் அதிகமாக உள்ளன. இதைக் கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்?’’

எம்.தயாநிதி, ஆற்காடு.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி சம்பங்கி விவசாயி கலைச்செல்வன் பதில் சொல்கிறார்.

‘‘என்னுடைய அனுபவத்தில் சம்பங்கிச் சாகுபடி நல்ல லாபம் தரும் பயிர். ஆனால், அதில் உருவாகும் களையைக் கட்டுப்படுத்தும் ‘கலை’ தெரிந்திருக்க வேண்டும். எங்கள் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தில் களையெடுக்க ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனால், மல்ச்சிங் ஷீட் (பாலீத்தின் மூடாக்கு) விரிப்பு போட அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய்தான் செலவு. அதாவது, ஏக்கருக்கு 120 கிலோ மல்ச்சிங் ஷீட் தேவைப்படும். தற்போது, கிலோ ரூ.150 வரை விற்பனையாகிறது. பாலித்தீன் மூடாக்குப் போட்டால், பட்டாம் பூச்சிப் பாசனம் அமைக்க வேண்டும். சம்பங்கிச் செடிகள்மீது, மழைபோலத் தண்ணீர் தெளிப்பத்தால், பூச்சி-நோய் தாக்குவதும்கூடக் குறைகிறது. பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்க ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். ஒருமுறை இந்த அமைப்புகளுக்குச் செலவு செய்துவிட்டால், சுமார் 4 ஆண்டுகளுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!