வளமான வருமானம் தரும் கொத்தமல்லி!

50 சென்ட்... 45 நாள்கள்... ரூ 75,000மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி... பெரும்பான்மையான உணவுகளில் இடம்பெறும் விளைபொருள் கொத்தமல்லித் தழை. உணவுகளுக்கு மணமூட்டியாகப் பயன்படும் கொத்தமல்லித் தழைக்குச் செரிமான சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் உண்டு. அதனால்தான் இதை அன்றாடச் சமையலில் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டுவந்தனர் நம் முன்னோர். இதற்குச் சந்தையில் தேவை அதிகமாக இருப்பதால் காய்கறி, கீரைகள் பயிரிடும் பெரும்பாலான விவசாயிகள் கொத்தமல்லிக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அந்தவகையில், அரை ஏக்கர் நிலத்தில் சுழற்சிமுறையில் கொத்தமல்லிச் சாகுபடியை மேற்கொண்டுவருகிறார்கள், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்ற வெங்கடாசலபதி-பேபி தம்பதியர்.

பொங்கலூர் ஒன்றியம் வே.வடமலைபாளையம் கிராமத்தில் இவர்களின் நிலம் உள்ளது. கொத்துமல்லி வயலில் பாசனம் செய்து கொண்டிருந்த மணி மற்றும் பேபி ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதுமே, “நாங்க ‘பசுமை விகடன்’ முதல் புத்தகத்துல இருந்து படிச்சிட்டுருக்கோம்” என்று சொல்லிச்  சந்தோஷப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்