குறைந்த பராமரிப்பில் ‘பலே’ வருமானம்!

1 ஏக்கர் 30 சென்ட்...மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்

“காடுகள்ல இருக்கிற மரங்கள்லாம் செழிப்பா இருக்குறதுக்குக் காரணம், அங்கே நிலவுற சூழல்தான். அதே மாதிரி நம்ம நிலத்துலயும் பயிர் வளர்றதுக்கான சரியான சூழலை ஏற்படுத்திட்டா போதும். எந்தப் பராமரிப்பும் இல்லாமலேயே விளைச்சல் எடுத்துட முடியும்” என்று சொல்லும்  ஞானப்பிரகாசம், தன்னுடைய வயலில் இதை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள நரசிங்க நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி ஞானப்பிரகாசம். இவர், எந்தப் பராமரிப்பும் இல்லாமல், தன்னுடைய 1 ஏக்கர் 30 சென்ட் பரப்பில் பலவிதப் பயிர்களைச் சாகுபடிசெய்து நிறைவான வருமானம் ஈட்டிவருகிறார்.

ஒரு காலைப்பொழுதில் ஞானப் பிரகாசத்தைச் சந்தித்தோம். “தமிழர்கள் விவசாயத்துல தலை சிறந்தவங்க. நான் கடைப்பிடிக்கிறது எல்லாமே நம்ம முன்னோர் கடைப்பிடிச்ச தொழில்நுட்பங்கள்தான். அதனால இதைத் ‘தமிழர் வேளாண்மை’னுதான் சொல்றேன். நாங்க பூர்வீக விவசாயக் குடும்பம்தான். நான் காலேஜ் முடிச்சுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன். பாரம்பர்யத் தமிழ் மருத்துவமும் செஞ்சுட்டுருக்கேன். பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட காலங்கள்ல நாங்களும் ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். ஆனா, நாலஞ்சு வருஷங்கள்லயே ரசாயன உரங்களோட பாதிப்புகளை உணர்ந்து, நம்ம பாரம்பர்ய விவசாயமுறையைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சுட்டோம்” என்ற ஞானப்பிரகாசம் நம்மைத் தோட்டத்துக்குள் அழைத்துச் சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்