மரம் செய விரும்பு! - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன்

யற்கை பூமிக்குக் கொடுக்கும் கொடை மழை. வாராது வரும் அந்த மாமழையை நாம் முறையாகச் சேமிப்பதில்லை. ‘மனிதர்களால் பயனிருக்காது’ எனத் தெரிந்த இயற்கை, மழையைச் சேகரிக்கும் பணியையும் தானே செய்துவருகிறது. பன்னெடுங்காலமாக அப்பணியைச் செய்துவருபவைதான் வனங்கள். குறிப்பாக ‘சோலைக்காடுகள்’ என அழைக்கப்படும் ‘வெயில் அறியா பொதும்புகள்’ மழை நீர் சேகரிப்புப் பணியை மிக அற்புதமாகச் செய்துவருகின்றன. இந்தச் சோலைக்காடுகளில் பெய்யும் மழை நீர், புல் மற்றும் சிறு செடிகளால் உறிஞ்சப்பட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கசிந்து, சிற்றோடையாக மாறும். இப்படிக் காடுகளுக்குள் உருவாகும் சிற்றோடைகள்தான் அருவியாகவும், ஆறாகவும், வற்றாத ஜீவ நதிகளாகவும் உருவெடுக்கின்றன. இந்த நீராதாரத்துக்கான முக்கியக் காரணிகளில், சோலைக்காடுகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.

சாதாரணக் காடுகளுக்கும் சோலைக் காடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பலவிதப் புற்கள், பூண்டுகள், வானுயர்ந்த மரங்கள், குத்துச் செடிகள், கொடிகள்... எனப் பலவிதமான தாவரங்கள் மண்டியிருக்கும் காடுகள்தான் சோலைக்காடுகள். இக்காடுகளில் வெயில் அதிகமாக இருக்காது. இங்கு நிலவும் சீதோஷ்ணநிலை பல்லுயிர் பெருக்கத்துக்கு மிகவும் ஏற்றது. மண் வளத்திலும் மழை வளத்திலும் உச்சபட்ச வளர்ச்சியடைந்த தாவரங்களின் தொகுப்புதான் சோலைக்காடுகள். ஒரு சோலைக்காடு உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். சோலைக்காடுகளில் மனித நடமாட்டமே இருக்காது. விலங்குகள் மட்டுமே சுதந்திரமாகச் சுற்றித்திரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick