கருப்பையில் நீர்... கவனம்! | Dairy farming - Guidance for management - Pasumai Vikatan | பசுமை விகடன்

கருப்பையில் நீர்... கவனம்!

சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 5கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார், தொகுப்பு: த.ஜெயகுமார்

மாடு சினையாக இருக்கும்போது வருகிற பிரச்னைகளில் ஒன்று கருப்பையில் நீர் கோத்தல். இது தாய்-சேய் இணைப்புத்திசுவில் ஏற்படும் குறைபாடுகளால் வருகிறது. கர்ப்ப நிலையில் ஆறு அல்லது ஏழாவது மாதத்துக்குப் பிறகு இந்தப் பாதிப்பு வருகிறது. இந்நோய் இரண்டு வகைப்படும். படிப்படியாகப் பனிக்குடத்தில் நீர் அதிகரிப்பது ஒரு வகை. இந்தப் பாதிப்பை ஆங்கிலத்தில் ‘ஹைட்ராம்னியாஸ்’
(Hydramnios) என்று சொல்வார்கள். திடீரென்று பனிக்குடத்தில் நீர் அதிகரிப்பது இரண்டாம் வகை. இதை ‘ஹைட்ரால்லன்டாய்ஸ்’(Hydrallantois) என்கிறார்கள். மரபு வழியாகவும் வைட்டமின் ஏ குறைபாடு காரணமாகவும் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

வழக்கமாகப் பனிக்குடத்தில் 4 லிட்டர் முதல் 8 லிட்டர் வரை நீர் இருக்கும். நீர் கோத்தல் பாதிப்புக்குள்ளாகும் மாட்டின் கருப்பையில், 20 லிட்டர் முதல் 120 லிட்டர் வரை கூடப் பனிக்குட நீர் இருக்கும். பாதிப்பைப் பொறுத்து நீரின் அளவு மாறுபடும். பனிக்குட நீர் அதிகரித்து வயிறு பெரிதாகத் தோன்றும்போது, சிலர் ‘இரட்டைக் கன்றுகள் பிறக்கும்’ என நினைப்பார்கள். ஆனால், அப்படி நினைத்துக் கவனமின்றி இருந்தால், வில்லங்கத்தில் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதனால், வயிறு அதிகளவில் பெருத்துக் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டியது அவசியம். கருப்பையில் நீர் கோத்துப் பாதிப்பு அதிகமாகும்போது, சினை மாடு தவளைபோலத் தரையில் படுத்துக்கொள்ளும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick