மண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசிஓவியம்: ஹரன்

மீபத்துல ஒரு பொக்கிஷம் கைக்குக் கிடைச்சது. பொக்கிஷம்னு சொன்னவுடனே தங்கம், வைரம்னு நினைச்சிடாதீங்க. 1950-ம் வருஷம் வாக்குல, தமிழக வேளாண்மைத் துறை வெளியிட்ட ‘மேழிச்செல்வம்’ங்கிற இதழ் நண்பர் மூலமா வந்து சேர்ந்துச்சு. அதைத்தான் பொக்கிஷம்னு சொன்னேன். அந்த இதழைப் புரட்டிப் பார்க்கும்போது, 65 வருஷத்துக்கு முன்ன, தமிழ்நாட்டுல எப்படி விவசாயம் நடந்துச்சுன்னு தெளிவா புரிஞ்சிக்க முடிஞ்சது.

அந்தக் காலத்துல, மேழிச்செல்வம் (‘மேழி’ என்றால் ‘கலப்பை’) இதழுக்குச் சந்தா கட்டி படிக்கிற விவசாயிகளுக்கு, ஊருக்குள்ள நல்ல மரியாதை இருந்திருக்கு. வேளாண்மைத்துறை விரிவாக்கப் பணியாளர்களும், மேழிச்செல்வம் படிக்கிற விவசாயிகள்கிட்டதான், புதுமையான தொழில்நுட்பங்களைச் செய்துபார்க்கச் சொல்வாங்களாம். ஓர் இதழோட விலை மூன்று அணா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick