பரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்! | Paramparagat Krishi Vikas Yojana - Organic farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

பரம்பராகட் கிரிஷி... ரூ.7 லட்சம் மானியம் - இயற்கை விவசாயத்துக்கு ஓர் இனிய திட்டம்!

திட்டம்த.ஜெயகுமார், படங்கள்: எம்.விஜயகுமார், க.தனசேகரன், சி.ரவிக்குமார்

யற்கை விவசாயத்தைப் பரவலாக்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுகளாக ‘பரம்பராகட் கிரிஷி விகாஸ் யோஜனா’ (Paramparagat Krishi Vikas Yojana-பாரம்பர்ய வேளாண் வளர்ச்சி திட்டம்) எனும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி புதுடெல்லி அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இயற்கை விவசாய மாநாட்டில், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இத்திட்டம் குறித்துப் பெருமையாகப் பேசிய பிறகுதான், பலருக்கும் இப்படியொரு திட்டம் நடைமுறையில் இருப்பதே தெரிய வந்துள்ளது. “இத்திட்டத்தின் மூலமாக இதுவரை 2.25 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் இயற்கை விவசாயத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 2025-ம் ஆண்டுக்குள் 14 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும்” என்று ராதாமோகன் சிங் தெரிவித்தார்.  தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்துத் தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick