நம்மாழ்வார் கற்றுக்கொடுத்த நல் தொழில்நுட்பம்!

தொழில்நுட்பம் துரை.நாகராஜன், படங்கள்: இ.பாலவெங்கடேஷ்

ம்மாழ்வார் என்ற ஆலமரத்திலிருந்து உருவாகியுள்ள ஆயிரக்கணக்கான விழுதுகள் நாடெங்கிலும் பரவி நம்மாழ்வாரின் கொள்கைகளையும் தொழில்நுட்பங்களையும் பரப்பிவருகின்றன. அப்படி ஒரு விழுதுதான், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகிலுள்ள பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு. நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சுப்புவைச் சந்தித்துப் பேசினோம். “ரசாயனத்தால் கெட்டுப்போன மண்ணை மாற்ற வேண்டும், தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார் நம்மாழ்வார் ஐயா. பஞ்சகவ்யா, அசோலா போன்ற இயற்கை பொருள்களைப் பயன்படுத்தித் தற்சார்பு விவசாயம் செய்ய முடியும் என உறுதிப்படச் சொல்லி அவற்றைத் தயாரிக்கும் முறைகளையும் கற்றுக்கொடுத்து வந்தார். அவர் சொல்லிக்கொடுத்த மண்புழு உரம், அசோலா, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல்...போன்ற இடுபொருள்களின் தயாரிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான் நான் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறேன். மற்ற விவசாயிகளுக்கும் இதைக் கற்றும் கொடுக்கிறேன்” என்ற சுப்பு தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக்கொண்டே பேசினார்.

“காய்ந்த தென்னை மட்டைகளை இரண்டு அடித்  துண்டுகளாக வெட்டி, இலை தழைகளோட கலந்து 12 அடி நீளம், 2 அடி அகலத்துல மேட்டுப்பாத்தி மாதிரி பரப்புவேன். சாணம், மாட்டுச் சிறுநீர் ரெண்டையும் கலந்து, அந்தக் கலவைமேல தெளிச்சுவிடுவேன். அதன்மீது திரும்பவும் மட்டைகள், தழைகளை அடுக்கடுக்காகப் போடுவேன். இப்படிப் போட்டு வெச்சுட்டா அதுல இருந்து நிறைய மண்புழு உரம் கிடைக்கும். அதைச் சலிச்சு பயிருக்குப் பயன்படுத்திட்டிருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick