இயற்கை வாரச்சந்தை... விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம்!

முயற்சிஇ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘விவசாயிகளே வியாபாரிகளாக மாறி நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும்’ என்று தான் கலந்துகொள்ளும் கூட்டங்களிலெல்லாம் வலியுறுத்தி வந்தார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார்.

அவரின் கொள்கையைப் பின்பற்றி இயற்கை விவசாயம் செய்துவரும் பலரும் மதிப்புக்கூட்டல், நேரடிவிற்பனை போன்ற விஷயங்களைச் செயல்படுத்திக் கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறார்கள். அந்த வகையில், சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஓர் இயற்கைச் சந்தைதான், ‘தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை’.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சுற்றியுள்ள இயற்கை விவசாயிகள் ஒன்றிணைந்து ‘தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர். இவ்வமைப்பின்மூலம் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று, விவசாயிகள் தங்களின் பொருள்களை நேரடியாக விற்பனை செய்துவருகிறார்கள். இவர்களின் வாரச்சந்தைக்குப் பெயர்தான், தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை. இச்சந்தையில் விவசாயிகளே தங்கள் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick