காற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்! | Farmers training programme on Organic farming in Wayanad - Pasumai Vikatan | பசுமை விகடன்

காற்றில் கார்பனைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!

நாட்டுநடப்புத.ஜெயகுமார்

னைத்து வகையான தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையம் (National Bio-Diversity Authority) மற்றும்
எம்.எஸ்.சுவாமிநாதன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து பத்திரிகையாளர் களுக்கான பயிற்சி வகுப்பை நடத்தின. இந்த வகுப்பு கடந்த நவம்பர் 29-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியப் பல்லுயிர் பெருக்கப் பகுதியான கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், புத்தூர்வயலில் இந்தப் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் தென்னிந்திய ஊடகங்களிலிருந்து வந்திருந்த பலர் கலந்துகொண்டனர்.

தொடக்க நாளில் பேசிய தேசிய பல்லுயிர்பெருக்க ஆணையத்தின் செயலாளர் ரபிகுமார், “உலக அளவில் 20 லட்சம் தாவர, விலங்கினங்கள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 92 ஆயிரம் இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவ்வளவுக்கும் உலகப் புவியியல் பரப்பில் இந்தியாவின் பகுதி 7-8 சதவிகிதம் மட்டுமே. இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலை பல்லுயிரினங்கள் வாழ்வதற்கு முக்கியப் பகுதியாக இருந்துவருகிறது. அடுத்துதான் இமயமலை உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick