மூங்கில் சாகுபடி... வந்தது சட்டத்திருத்தம்!

வனம்ஆர்.குமரேசன்

மூங்கில் இதுவரை மரங்களின் பட்டியலில்தான் இருந்து வந்தது. அதனால், ‘இந்திய வனச்சட்டம் 1927’-ன்படி, மூங்கிலை வெட்டவோ, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்லவோ அரசிடம் அனுமதிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது.

விவசாயிகளின் வருமானத்தை 2020-ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக, மூங்கிலை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய முடிவுசெய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச்சட்டம் ஒன்றைக் கடந்த நவம்பர் மாதம் 23-ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, இந்த அவசரச்சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். கடந்த டிசம்பர் 20-ம் தேதி இந்த அவசரச்சட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் நிறைவேறியுள்ளது. இதனால், நாட்டில் மூங்கில் சாகுபடி அதிகரிக்கவும் அது தொடர்பான தொழில் வாய்ப்புகள் பெருகவும் வாய்ப்புகள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick