தண்டோரா | Announcements and meetings - Pasumai Vikatan | பசுமை விகடன்

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

ஒருங்கிணைந்த பண்ணையம்

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 4-ம் தேதி ‘தர்பூசணி மற்றும் முலாம் பழச் சாகுபடி’, 5-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 9-ம் தேதி ‘கோழி வளர்ப்பு’, 11-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ 24-ம் தேதி ‘மண் மேலாண்மை’, 25-ம் தேதி ‘மீன்களில் நோய்க் கட்டுப்பாடு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

கறவை மாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜனவரி 2-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’, 9-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

மதிப்புக்கூட்டிய பொருள்கள்

சிவகங்கை, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 9-ம் தேதி ‘மீன் வளர்ப்பில் மண், நீர் மற்றும் தீவன மேலாண்மை முறைகள்’, 11-ம் தேதி ‘தக்காளியில் மதிப்புக்கூட்டிய பொருள்கள் தயாரித்தல்’, 23-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’, 30-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு தொழில்நுட்பங்கள்’, 31-ம் தேதி ‘நுண்ணீர் பாசன முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288

 மண்புழு உரம்

சிவகங்கை மாவட்டம், அமராவதிப்புதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில் ஜனவரி 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’, 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ‘காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04565 250651, செல்போன்: 94438 44651.

பண்ணைக் கருவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 3, 4-ம் தேதிகளில் ‘காளான் வளர்ப்பு’, 9, 10-ம் தேதிகளில் ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 11, 12-ம் தேதிகளில் ‘தோட்டக்கலைப் பண்ணைக் கருவிகள் மற்றும் நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மை முறைகள்’, 23, 24-ம் தேதிகளில் ‘கெண்டை மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பூட்டப்பட்ட சிறுதானியங்கள்’, 30, 31-ம் தேதிகளில் ‘தானியப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

  காளான் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஜனவரி 4-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 9-ம் தேதி ‘மாடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘சிறுதானிய உணவுப் பண்டங்கள் தயாரித்தல்’, 30-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

கட்டணப் பயிற்சிகள்

மாடித்தோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி ‘இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரித்தல்’, ஜனவரி 30-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. பயிற்சிக் கட்டணம் `100. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.


நம்மாழ்வார் நினைவேந்தல்!

காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம், காந்தி சாலையிலுள்ள பெரியார் சுடரில் டிசம்பர் 30-ம் தேதி, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் 4-ம் ஆண்டு நினைவேந்தல், படத்திறப்பு, ‘மரக்கன்று வழங்குதல்’, இயற்கை உணவு வழங்குதல்’ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், இயற்கை விவசாயிகள் தாந்தோணி மற்றும் பேரின்பன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன், ‘எழில்சோலை’ மாசிலாமணி, வீ.இறையழகன்... உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick