அன்று 56 காய்கள்... இன்று 180 காய்கள்! - தென்னையைச் செழிக்க வைத்த இயற்கைத் தொழில்நுட்பங்கள்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

“எங்களோட நிலத்து மண்ணு சத்தே இல்லாம இருந்துச்சு. மண்ணுல எப்பவும் ஈரத்தன்மையும் இருக்காது. அதனால, தென்னை மரமெல்லாம் சுணங்கியே இருந்துச்சு. ஒவ்வொரு மரத்துலயும் ஒரு வெட்டுக்கு எட்டுக் காய்தான் கிடைக்கும். ‘பசுமை விகடன்’ புத்தகம் மூலமா நம்மாழ்வாரோட ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்ச பிறகு, மரங்கள் நல்லா காய்க்க ஆரம்பிச்சது. இப்போ ஒரு வெட்டுக்கு 28 காய்கள் வரை கிடைக்குது” என்று சிலாகிக்கிறார்கள் சதாசிவம் மற்றும் சின்னதம்பி. தஞ்சாவூர் மாவட்டம், சூரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சகோதரர்கள். மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றும் சதாசிவம், பசுமை விகடன் இதழின் தீவிர வாசகர். டெல்லியில் வியாபாரம் செய்து வந்த சின்னதம்பி, விவசாயத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாகச் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, தென்னையில் வெற்றிகரமாக மகசூல் எடுத்து வருகிறார்கள்.

ஒரு மதிய வேளையில் இவர்களின்  தென்னந்தோப்புக்குச் சென்றோம். மரத்திலிருந்து வெட்டிய காய்களை ஓரிடத்தில் குவித்துக்கொண்டிருந்தார்கள் இருவரும். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தங்களின் விவசாயம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார் சதாசிவம். “எங்க குடும்பத்துக்கு 14 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 5 ஏக்கர் நிலத்துல முந்திரி இருக்கு. அஞ்சு ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றோம். மீதி
4 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. முழுக்கச் செம்மண் பூமி. ஆற்றுப்பாசன வசதியெல்லாம் கிடையாது. வறட்சியான பகுதி. இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் இந்தப்பகுதியில தென்னை மரங்களே கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick