ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செழிப்பான லாபம் தரும் - இயற்கை சம்பங்கி

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் வீரிய ரகப் பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை நம்பியே இருக்கிறார்கள். இதற்கு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எனப் பெருமளவில் செலவு செய்தாலும், உத்தரவாதமான வருமானம் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகள்தான் இப்பகுதியில் அதிகம். இதில், விழிப்பு உணர்வு பெற்ற சில விவசாயிகள் இயற்கைமுறை விவசாயத்துக்கு மாறி... சிறுதானியங்கள், மலர்கள் எனச் சாகுபடிசெய்து நீடித்த, நிலைத்த வேளாண்மையில் வெற்றிகரமாகப் பயணிக்கிறார்கள். அந்தவகையில், நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைப் பின்பற்றிச் சம்பங்கிச் சாகுபடிசெய்து, நல்ல லாபம் பார்த்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்.

ஒரு மதியவேளையில் மனைவி செந்தமிழ்ச்செல்வியுடன் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஆறுமுகத்தைச் சந்தித்தோம். “எங்களுக்குப் பூர்வீகம் இந்தக் கிராமம்தான். ஆனா, ரொம்ப வருஷமா இலங்கையிலுள்ள கண்டியிலதான் இருந்தோம். அங்க போர்வெல் மிஷின் ஆப்ரேட்டரா வேலை செஞ்சிட்டிருந்தேன். 1980-ம் வருஷம் சொந்த ஊருக்குக் குடும்பத்தோடு வந்துட்டோம். எங்க குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்துல, என் பங்கா ஒரு ஏக்கர் நிலம் கிடைச்சது. எனக்கு விவசாயத்துல இஷ்டம் இல்லாததால, போர்வெல் மிஷின் ஓட்டுற வேலைக்கே போய்க்கிட்டுருந்தேன். என் சகோதரர்கள்தான் என்னோட நிலத்துலயும் விவசாயம் செஞ்சிட்டிருந்தாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick