வேளாண் கருத்தரங்குகள்!

நாட்டு நடப்புசி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

72 நாடுகளுக்கு உணவளிக்கலாம்!

கடந்த டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் திருச்சி, குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளிவிழா நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நாளன்று ‘நாட்டின் வளர்ச்சியில் வேளாண்மைப் பொறியியலின் பங்கு’ எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. முனைவர் அழகு சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே.ராமசாமி, “நாட்டின் வளர்ச்சியில் வேளாண் பொறியியல் துறை முக்கியப்பங்கு வகிக்கிறது. விவசாயத்துக்குப் பணியாள்கள் கிடைப்பது அரிதாகிவரும் இந்த நேரத்தில், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு இயந்திரங்களை எதிர்பார்க்கும் நிலைமை அதிகரித்துள்ளது. அதனால், வேளாண் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick