விவசாயிகளுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு நுட்பம்!

தொழில்நுட்பம்துரை.நாகராஜன்

“மேலை நாடுகளில், விவசாயத்தில் மேற்கொள்ளப்படும் நவீன தொழில்நுட்பங்கள், நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அவற்றில் ‘செயற்கை நுண்ணறிவு’ என்றழைக்கப்படும் ‘ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (Artificial Intelligence),  செயற்கைக்கோள் படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும் ‘சாட்டிலைட் இமேஜினரி அண்டு அட்வான்ஸ்டு அனலிடிக்ஸ்’ (Satellite Imagery and Advanced Analytics). ‘கிளவுட் மெஷின் லேர்னிங்’ (Cloud Machine Learning), ஆகிய தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதின் மூலம், இந்தியாவில் சிறு விவசாயிகளின் மகசூல் மற்றும் விலை ஆகியவற்றை அதிகரிக்க முடியும்” என ‘மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனம்’ அண்மையில் தெரிவித்திருக்கிறது.

அதோடு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ‘வறண்ட வெப்ப மண்டலப் பிரதேசங்களுக்கான சர்வதேசப் பயிர் ஆராய்ச்சி மைய’த்துடன் (ICRISAT) இணைந்து... ‘செயற்கை நுண்ணறிவு விதைப்புச் செயலி’ (AI-Sowing App) மூலம் விவசாயிகளுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்களின் வயலில் எந்த விதமான சென்சார்களையும் நிறுவ வேண்டியதில்லை. செல்போன் மூலமாகவே தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்