உயிரைப் பறிக்கும் பூச்சிக்கொல்லி! கொந்தளிப்பில் விவசாயிகள்!

பிரச்னைஎம்.திலீபன், படம்: தி.ஹரிஹரசுதன்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி வயலில் ரசாயனப் பூச்சிக்கொல்லியைத் தெளித்தபோது... ராஜா, செல்வம், ராமலிங்கம், அர்ஜூனன் ஆகிய நான்கு விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்துக் கடந்த 10.12.17-ம் தேயிட்ட ‘பசுமை விகடன்’ இதழில் எழுதியிருந்தோம்.

இந்நிலையில், ‘பூச்சிக்கொல்லிகளால் பாதிப்படைந்து இறந்துபோன விவசாயிகளைப் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா கொச்சைப்படுத்துகிறார்’ என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவரைக் கண்டித்துக் கடந்த டிசம்பர் 20-ம் தேதி பெரம்பலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் (பி.யு.சி.எல்) மாநில இணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick