நெல் வயல் அழிப்பு... நீதி கிடைக்குமா?

பிரச்னைதுரை.நாகராஜன், படங்கள்: கா.முரளி

மீபத்தில், ‘நெல் வயலை அழிக்க வேண்டாம்’ என்று கதறியபடி ஓடும் ஒரு பெண் விவசாயி, டிராக்டருக்கு நடுவே விழும் காட்சியும், அதைத்தொடர்ந்து, காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் ‘உன் கையை ஒடித்துவிடுவேன்’ என மிரட்டும் காட்சியும் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

அந்தச் சம்பவம் நடந்த இடம், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில் உள்ள காமக்கூர் கிராமம். துணைக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நெல் வயல் அழிக்கப்படும் காட்சியைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, ‘விளைந்த நெற்பயிரை அழிப்பது அநியாயம். உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனச் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick