தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

இலவசப் பயிற்சிகள்

கறவை மாடு வளர்ப்பு

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜனவரி 24-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 31-ம் தேதி ‘கறவைமாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ள‌ன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451 2460141.

ஜப்பானிய காடை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜனவரி 23, 24 தேதிகளில் ‘கறவை மாடு வளர்ப்பு’, 30, 31 தேதிகளில் ‘ஜப்பானியக் காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 04567 231807

ஒருங்கிணைந்த பண்ணையம்

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் ஜனவரி 24-ம் தேதி ‘மண் மேலாண்மை’, 25-ம் தேதி ‘மீன்களில் நோய்கட்டுப்பாடு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345.

சந்தனம், செம்மரம்... வளர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரம், கவுலி பிரவுன் சாலையில் உள்ள வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் ஜனவரி 24-ம் தேதி ‘உயர்ரகச் சந்தன மரம் மற்றும் செம்மரம் வளர்ப்பு’ பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் என்கிற மத்திய அரசு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் செம்மரம், சந்தன மரங்கள் வளர்ப்பில்  உள்ள சட்டதிட்டங்களையும், அதைக்  கடைப்பிடிப்பதிலுள்ள பிரச்னைகளைப் பற்றியும், மத்திய அரசின் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் பற்றியும்  பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர்.  அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம். மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு,
செல்போன்: 94421 43520, 94433 84746.

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜனவரி 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெறவுள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick