நம்மாழ்வார் ஓவியம்... ‘பசுமை பரிசு’

#NammalvarArt

யற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மண்ணில் விதைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த 25-01-2014 தேதியிட்ட பசுமை விகடன் இதழில், அட்டைப்படமாக வெளியான நம்மாழ்வாரின் ஓவியத்தை, பெரிய வடிவில் புத்தகத்துடன் சேர்த்து வழங்குமாறு வாசகர்கள் கேட்டிருந்தனர்.

புத்தகத்துடன் கொடுக்கும்போது, மடிப்புகள் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், விகடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யும்வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். இதைப் பசுமை விகடன் மற்றும் விகடன் இணையதளம் வாயிலாக வாசகர்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தோம். பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த ஓவியத்தைப் பதிவிறக்கம்செய்து, தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இடையில் தொழில்நுட்பக் காரணங்களால், இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது அது, மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் சரிசெய்யப்பட்டுள்ளது.
 
இந்த http://bit.ly/2CIcw2o லிங்கில் சென்று நம்மாழ்வாரின் ஓவியத்தை, பசுமை விகடனின் பரிசாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து இந்தப் படத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick