நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்... | Country Chicken Farming Give A Good Profit - Pasumai Vikatan | பசுமை விகடன்

நல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்...

தீவனத்தில் கவனம்... அதிகரிக்கும் லாபம்!கால்நடைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல், ஓரளவுக்கு நிலையான வருமானத்தைத் தரக்கூடிய விவசாய உபதொழில், கால்நடை வளர்ப்புதான். அதேசமயம், கால்நடை வளர்ப்பில் அதிகச் செலவு பிடிப்பது தீவனத்துக்குத்தான். அதனால், தீவன மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டால், நல்ல லாபம் எடுக்க முடியும். அந்த வகையில், நாட்டுக்கோழி வளர்ப்பில் தீவன மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலூகா, நமனசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான முருகப்பன், சிவபிரபு ஆகியோர். இவர்கள் இருவருமே இளநிலைப் பொறியியல் பட்டதாரிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick