காடு, கழனிகளை அழித்துப் பசுமைச்சாலை... பொங்கியெ(அ)ழும் விவசாயிகள்! | Pasumai vazhi salai project - Pasumai Vikatan | பசுமை விகடன்

காடு, கழனிகளை அழித்துப் பசுமைச்சாலை... பொங்கியெ(அ)ழும் விவசாயிகள்!

பிரச்னைவீ.கே.ரமேஷ் - படங்கள்: க.தனசேகரன், எம்.விஜயகுமார்

#StopChennai-SalemGreenCorridorProject

ணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட்... இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது, சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை. விளைபொருளுக்கு விலையின்மை, கொள்முதல் நிலையக்கொள்ளை, கரும்பு ஆலைகள் வைத்திருக்கும் நிலுவைத்தொகை, கமிஷன் கடைக்காரர்களின் கிடுக்கிப்பிடி இவையெல்லாம் போக வாட்டி வதைக்கும் வறட்சி எனப் பல இம்சைகளுக்கு இடையில்தான் விவசாயம் செய்து வருகிறார்கள், தமிழக விவசாயிகள். இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் விவசாயத்தைவிட்டு வெளியே அனுப்பும் வகையில், தமிழகத்தின் மீது ஒவ்வொரு கணையாக ஏவி கொண்டிருக்கிறது, மத்திய அரசு. பத்தாயிரம் கோடி ரூபாயில், சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்து... ‘இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாலை’ எனப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது, மத்திய நெடுஞ்சாலைத்துறை. இத்திட்டத்துக்காக, 7,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த இருக்கிறது. இதில், 7,000 ஏக்கர் பரப்பு தனியார் நிலங்கள். மீதி 500 ஏக்கர் பரப்பு நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை. நிலங்களை எடுத்தால், தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் எனக் கலங்கி இத்திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள், விவசாயிகள். பல கிராமங்களில் கிராமசபைக்கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தை எதிர்த்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick