மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசிஓவியம்: வேல்

மீபத்துல, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்துல நடந்த பத்திரிகையாளர்களுக்கான ‘காலநிலை மாற்றமும் ஊடகங்களின் உரையாடலும்’ (Climate Change and the Urgent Need for a Media Narrative) பயிற்சிப் பட்டறையில கலந்துக்கப் போயிருந்தேன். அட்மினிஸ்டிரேடிவ் ஸ்டாஃப்  காலேஜ் ஆஃப் இந்தியா (Administrative Staff College of India) சார்புலத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க. பெல்ல விஸ்டா(Bella Vista)ங்கிற இந்தக் கல்லூரி வளாகம், ஒரு காலத்துல ஹைதராபாத் நிஜாமின் அரண்மனையா இருந்திருக்கு. நாடு சுதந்திரம் அடைஞ்சவுடனே, மிகச் சிறந்த நிர்வாகிகளை உருவாக்க, இந்த அமைப்பை உருவாக்கினாங்க. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்ல உயர் பதவி வகிக்கிறவங்களுக்கும், பல்வேறு வகையான நிர்வாகப் பயிற்சிக் கொடுக்கிறாங்க. இந்தக் கல்லூரி வளாகத்துல உள்ள நுழைஞ்சவுடனே, நிஜாம் காலத்துக்குப் போனது மாதிரி இருந்துச்சு. ராஜ உபசாரம்னு சொல்வாங்களே, அதை அங்க நேரடியாகப் பார்க்க முடிஞ்சது. இன்னைக்கும் விருந்து உண்ணும் உணவுக்கூடம், நிஜாம் காலத்து நடைமுறையை அப்படியே பின்பற்றுறாங்க. சாப்பிட உள்ளே போனால், ராஜமரியாதைதான். விதவிதமான உணவு வகைகள், இனிப்பு, காரம், புளிப்புனு அறுசுவை விருந்து, ரசிச்சு, ருசிச்சி சாப்பிட வெச்சது. சாப்பிடும்போது மன்னரைச் சுற்றி, சேவகம் செய்ய ஆள்கள் நிற்பதுபோல, இப்பவும், விருந்தினர்களைச் சுற்றிலும், ராஜ உணவுக் கொடுக்க, பணியாளர்கள் பவ்யமாக நிக்கறாங்க. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick