‘‘வெட்டிவேர், ஏக்கருக்கு ரூ 2 லட்சம் லாபம் தரும்!”

கருத்தரங்குஜி.சதாசிவம் - படங்கள்: எஸ்.தேவராஜன்

டந்த மே 13-ம் தேதி, கடலூர் சி.கே பொறியியல் கல்லூரியில்... ‘இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்’ மற்றும் ‘புதுச்சேரி வெட்டிவேர் நெட்வொர்க்’ ஆகிய அமைப்புகள் இணைந்து வெட்டிவேர் சாகுபடி குறித்த கருத்தரங்கை நடத்தின. இக்கருத்தரங்கில், தமிழகம் முழுவதுமிருந்து சுமார் 250 விவசாயிகள் கலந்துகொண்டனர். கடலூர் சி.கே குழுமத்தைச் சேர்ந்தவரும், இந்திய வெட்டிவேர் அமைப்பின் கெளவர தலைவருமான சி.கே.அசோக்குமார் குத்துவிளக்கு ஏற்றிக் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தார். நபார்டு வங்கியின் முன்னாள் முதன்மைப் பொது மேலாளர் நாகூர் அலி ஜின்னா, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கருத்தரங்கின் தொடக்கத்தில், கருத்தரங்குக்கான ஒருங்கிணைப்புப் பணிகளைப் பிரசன்னகுமார், இன்பரசன், செந்தூர்வேலன், வேலுமணி ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.  இக்கருத்தரங்கில் லாபகரமாக வெட்டிவேர் சாகுபடி செய்யும் முறை, வெட்டிவேரை விற்பனை செய்யும் வழிமுறைகள், வெட்டி வேரிலிருந்து மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல், அரசு மானியங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில்... நிபுணர்கள் விளக்கவுரை ஆற்றினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்