மண், மக்கள், மகசூல்! - பஞ்சபூதங்களும் விவசாயமும்...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 9மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: இ.பாலவெங்கடேஷ்

‘படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே’

- பாண்டியன் அறிவுடை நம்பி, குழந்தைச்செல்வத்தின் சிறப்பைப் பற்றிப் பாடிய புறநானூற்றுப் பாடல் இது.

‘நாம் உணவு உண்ணும் நேரத்தில், வீட்டிலிருக்கும் நம் குழந்தை குறுகுறுவென நடந்து வந்து, தன் சிறிய கையை நீட்டி, நாம் உண்ணும் சோற்றைக் குழப்புகிறது. அதே கையால் நம்மைப் பின்புறம் வந்து கட்டிக்கொள்கிறது. சோற்றினை வாயால் கவ்வியும், கையால் துழாவியும், தன் உடல் மீதெல்லாம் நெய் கலந்த சோறு சிதறியும் நம்மைப் பார்த்துச் சிரித்து நம்மை மயக்குகிறது. எவ்வளவு செல்வம் இருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் வாழ்நாளின் பயன்தான் என்ன?’ என்பதுதான் இச்செய்யுளின் பொருள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick