ஆலையை நிரந்தரமாக மூடுவதே தீர்வு... சூடு தணியாத தூத்துக்குடி!

போராட்டம்இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம், ஆர்.எம்.முத்துராஜ்

தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நூறாவது நாளாக நடந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளு கலவரமாக மாறி... தடியடி, கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு என்று திசைமாறிவிட்டது. அதில், 13 பேர் அநியாயமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர். நூற்றுக் கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்னமும் துயரத்திலிருந்து மீளவில்லை தூத்துக்குடி மக்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick