கல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா! - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...

நாட்டு நடப்புதுரை.நாகராஜன் - படங்கள்: சி.சுரேஷ்குமார்

பாரம்பர்ய உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில், அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் உள்ள உயிர்தொழில்நுட்பவியல் துறையைச் சேர்ந்த மாணவர்களால்  பாரம்பர்ய உணவுத் திருவிழா கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளிடையே  கல்லூரி வளாகத்திலேயே பாரம்பர்ய உணவு சமைக்கும் போட்டி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் 50 குழுக்களாகப் பிரிந்து உணவுகளைச் சமைக்க ஆரம்பித்தனர். அந்த இடமே திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. உணவு சமைக்கும்போது மாணவிகளிடையே கடும்போட்டி நிலவியதையும் காணமுடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick