கலப்பைக் கல்யாணம்! | Farmer done the Marriage with the Witness of the plow - Pasumai Vikatan | பசுமை விகடன்

கலப்பைக் கல்யாணம்!

நிகழ்ச்சிஎம்.திலீபன்

க்னி குண்டம், யாகம் என எதுவுமில்லாமல், ஏர்க் கலப்பையைச் சாட்சியாக வைத்துத் தன் மகனுக்குத் திருமணம் நடத்தி அசத்தியிருக்கிறார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகன். இத்திருமணத்தில் ஏர்க் கலப்பையைச் சுற்றி வந்த மணமக்கள், தங்களின் சந்ததியினருக்கும் இதே முறையில் திருமணத்தை நடத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இந்தத் திருமணம் நடந்தேறியது, ஜெயங்கொண்டம் அருகில் உள்ள குவாகம் எனும் கிராமத்தில். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகனின் மகன் அன்பரசன். இவருக்கும் கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த துர்காதேவி என்பவருக்கும்தான், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கலப்பைச் சாட்சித் திருமணம் நடை பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick