இயற்கையின் மடியில் இனிய விழா!

நாட்டு நடப்புஜ.காவ்யா - படங்கள்: சி.சுரேஷ்குமார்

டந்த பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷன் அரங்கத்தில், ‘ரெஸிப்ரோசிட்டி’ அமைப்பின் சார்பாகக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் ‘பசுமை விகடன்’ ஊடக ஆதரவு வழங்கியிருந்தது.
‘டீம் இந்தியா’ இயக்கத்தின் தலைமைச்செயல் அலுவலர் ரவி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயற்கையோடு இயைந்த தளமான கலாக்ஷேத்ராவில் மரங்களுக்கு நடுவில் காற்றின் கீதத்தோடு விழா அரங்கேறியது.

நவீனத்தைத் தழுவினால் இயற்கை சீர்கேட்டை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்பதை மாற்றியமைக்கும் வகையில், சூழலைக் கெடுக்காத ‘அதி நவீன வீடு’ ஒன்றின் மாதிரியை அமைத்திருந்தனர். சுற்றுச்சூழலுக்கு எவ்வகையான தீங்கும் விளைவிக்காதபடியும், கழிவுகளை ஆக்கப்பூர்வமாக மாற்றியும் செய்யப்பட்ட பொருள்களுக்கான கண்காட்சி அரங்கும் அமைக்கப்பட்டிருந்தன. யானையின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பல பொருள்கள், இயற்கையான பொருள்களில் செய்யப்பட்ட அழகுசாதனங்கள், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பென்சில்கள், கையேடுகள் என அங்கு விற்பனை செய்யப்பட்ட அனைத்துமே கலைநயத்தோடும் சுற்றுச்சூழல் அக்கறையோடும் தயார் செய்யப்பட்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick