காவிரி நீர்... தீர்ப்பு செல்லாது! - #CauveryVerdict

நதிநீர்த.ஜெயகுமார்

மிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த காவிரி நதிநீர் மேல்முறையீட்டு வழக்கில்... கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இணைந்த மூவர் அமர்வு தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பில், ‘தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகமாக இருக்கிறது’ என்ற காரணத்தைச் சொல்லி, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரின் அளவு குறைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், “நிலத்தடி நீர் குறித்த பழைய புள்ளி விவரங்களை வைத்துத்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது” எனச் சொல்கிறார் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பொறியாளர் அ.வீரப்பன். இத்தீர்ப்பு குறித்துப் பேசிய வீரப்பன், “தண்ணீர் குறைப்புக்கான காரணம் குறித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பில், 433-ம் பக்கத்திலிருந்து 438-ம் பக்கம் (பத்திகள் 386-387) வரை தெளிவாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick