காவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், மு.இராகவன் - படங்கள்: ம.அரவிந்த், செ.ராபர்ட்

ல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தைச் செழிக்க வைத்துக்கொண்டிருக்கும் காவிரி ஆறு, இன்னும் நெடுங்காலம் தமிழகத்துக்குப் பயனளிக்க வேண்டும் என்பதற்காகத்தான்... 1924-ம் ஆண்டில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால், அந்த ஒப்பந்தங்களை மீறி அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுத்து வருகிறது கர்நாடக மாநிலம்.

இப்பிரச்னையைத் தீர்ப்பதற்காக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி கடந்த 1990-ம் ஆண்டு ‘காவிரி நடுவர் மன்றம்’ அமைக்கப்பட்டது. தொடர்ந்து நடுவர் மன்றத்தில் நடந்து வந்த வழக்கின் இறுதித்தீர்ப்பில், ‘தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்க வேண்டும்’ என உத்தரவிடப் பட்டது.

இந்நிலையில் ‘எங்கள் மாநிலத்துக்கான தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்’ எனத் தமிழக அரசும் கர்நாடக அரசும் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழக மக்கள் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது. தீர்ப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான உத்தரவுகள் தமிழ்நாட்டு மக்களுக்குத் துயரம் தரக்கூடியவை’’ என்று சொல்கிறார்கள் தமிழக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick