மாநகர குப்பையில் இயற்கை உரம்... - விவசாயிகளுக்கு இலவசம்!

திட்டம்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

மிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்படிச் சேகரிக்கும் குப்பைகள், கழிவுகளைப் பெரும்பாலும் தீ வைத்து எரித்துத்தான் அப்புறப்படுத்துகிறார்கள். இந்நிலையில், குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அசத்தி வருகிறது திருநெல்வேலி மாநகராட்சி.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) முனைவர் நாராயணன் நாயரிடம் பேசினோம். “கடந்த 1994-ம் ஆண்டில் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுச் செயல்பட்டு வருகிறது திருநெல்வேலி மாநகராட்சி. மொத்தம் 55 வார்டுகள், 17 சுகாதார யூனிட்டுகளை உள்ளடக்கித் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் ஆகிய 4 மண்டலங்களாகச் செயல்பட்டுவருகிறது. கடந்த 2016 டிசம்பர் 21-ம் தேதி முதல் மாநகர மக்களிடமிருந்து மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்துச் சேகரிக்கிறார்கள் பணியாளர்கள். இப்படி மட்கும் குப்பை, மட்காத குப்பை எனத் தரம் பிரித்துச் சேகரிப்பதில், இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது திருநெல்வேலி மாநகராட்சி” என்ற நாராயணன் நாயர் தொடர்ந்தார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick