ஈரநிலங்கள்தான் நகர்ப்பகுதிகளுக்கான நிலைத்த எதிர்காலம்

சுற்றுச்சூழல்ஆர்.குமரேசன்

பிரேசில் நாட்டில் நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி (Kayas Theory). அப்படித்தான் நாம் செய்யும் சின்னச்சின்னச் சூழலியல் தவறுகள், நம் சந்ததிகளையே பாதிக்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள், நச்சு ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி விஷங்கள் போன்றவை பூமியை மட்டுமல்லாது சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துகிறது. இதோடு சதுப்பு நிலக்காடுகளையும் அழித்து வருகிறது.

‘எதற்கும் உதவாத சாதாரண நிலங்கள்தானே இந்தச் சதுப்பு நிலங்கள்’ என்ற நம் அலட்சியத்தின் விளைவால், சூழல் சூனியமாகிக் கிடக்கிறது. பருவம் தவறி மழை பெய்கிறது. வெள்ளச்சேதம் ஏற்படுகிறது. கடல் சீறுகிறது. மனிதகுலம் எதிர்கொள்ளும் சூழல் சார்ந்த பிரச்னைகளின் பின்னணியில் ஈர நிலங்கள் எனப்படும் சதுப்பு நிலங்களின் அழிவும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. ‘அதென்ன ஈர நிலங்கள்?’ உலகெங்கிலும் உள்ள ஈரமான புல்வெளிகள், ஆறுகள், கழிமுகங்கள், பவளத் திட்டுகள், தாழ்வான நிலங்கள், குளம், குட்டைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நெல் வயல்கள், சதுப்பு நிலக்காடுகள் போன்றவைதான் ஈர நிலங்கள். இவற்றில் கடலுக்கும் நிலப்பகுதிக்கும் இடையே ஆண்டு முழுவதும் நீர் தேங்கியிருக்கும் நிலப்பரப்புகள்தான் ‘சதுப்பு நிலங்கள்’. இவற்றின் ஆழம் குறைவாக இருக்கும். இந்த நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காகவும், இவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் ‘ராம்சர்’ என்ற சர்வதேச அமைப்பு செயல்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்