சிறுதானியங்கள்தான் இனி ‘ஸ்மார்ட்’ உணவு!

நாட்டுநடப்புபசுமைக்குழு - படம்: எஸ்.ரவிக்குமார்

த்திய அரசு 2018-ம் ஆண்டைத் தேசிய சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இதனால், சிறுதானியங்களின் பற்றிய கலந்துரையாடல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. உலக அளவில் கினோவா என்கிற தானியம் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அதேயளவுக்குச் சத்துகள் கொண்ட இந்தியாவின் கேழ்வரகு, தினை ஆகிய தானியங்களைப் பரவலாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல்(ரோம்), ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகிய அமைப்புகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க சிறுதானியங்கள் அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால், இந்திய அரசும் தேசிய சிறுதானிய இயக்கத்தைத் தொடங்கி, அதை மேலும் பரவலாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஓங்கி ஒலித்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick