பூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டத்தால் யாருக்கு லாபம்?

சூழல்அனந்து

த்திய வேளாண் அமைச்சகம் சமீபத்தில் ‘பூச்சிக்கொல்லி மேலாண்மைச் சட்டம்-2017’ எனும் சட்டத்தை இயற்றி, அதற்கான கருத்துகளைப் பெற 15 நாள்கள் கால அவகாசமும் கொடுத்திருந்தது.

கடந்த 2017-ம் ஆண்டில் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்பட்டுத் தமிழகம் உள்படப் பல மாநிலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தனர். இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்தனர். இத்தருணத்தில் இச்சட்டம் இயற்றப்பட்டது சரிதான் என்றாலும்... ஏற்கெனவே ‘இன்செக்டிசைட்ஸ் ஆக்ட் 1968’ (Insecticides Act 1968) என்னும் பூச்சிக்கொல்லித் தொடர்பான சட்டம் நடைமுறையில் இருக்கும்போது, அதில் மாற்றங்களைக் கொண்டுவராமல் புதிய சட்டம் இயற்றவேண்டிய அவசியம் என்ன என்பது சந்தேகத்தை எழுப்புகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick