உளுந்து 45 ரூபாய்... பச்சைப்பயறு 48 ரூபாய்!

முன்னறிவிப்புதுரை.நாகராஜன்

மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வக மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டம் - விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்கீழ் அடுத்தடுத்த மாதங்களில் அறுவடை செய்யப்படும் பச்சைப்பயறு, உளுந்து ஆகியவற்றுக்குக் கிடைக்கும் விலைநிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பச்சைப்பயறு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2,38,000 ஹெக்டேர் பரப்பில் பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. இதன்மூலம் 1,25,000 டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. கோ-6, கோ-7, கோ-8 மற்றும் வம்பன்-3 ஆகிய பச்சைப்பயறு ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், திருவள்ளூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பச்சைப்பயறுச் சாகுபடி செய்யப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்