விமான நிலைய விரிவாக்கம்... காலியாகும் பசுமை நிலங்கள்...

பிரச்னைக.ரமேஷ் - படங்கள்:க.தனசேகரன்

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கரும்பு, வாழை, மஞ்சள் என முப்போகம் விளையக்கூடிய நன்செய் நிலங்கள் 570 ஏக்கரைக் கையகப்படுத்த இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தற்கொலை செய்தாவது விளைநிலங்களைக் கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம், காமலாபுரம் விமான நிலையத்திற்காக ஏற்கெனவே 1989-ம் ஆண்டு 165 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திக் கடந்த 30 ஆண்டுகளாக விமானச் சேவை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் ட்ரூஜெட் என்ற விமானச் சேவையைத் தொடங்கி வைத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 570 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த களத்தில் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். இதில் காமலாபுரம், பொட்டிபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி என 4 பஞ்சாயத்துகளில் உள்ள கொண்டையனூர், பம்பரம்பட்டியூர், சட்டூர், குப்பூர், காட்டூர், கோலனூர், குருவிரெட்டியூர், சானார் தெரு, பங்காட்டூர் எனப் பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் பாதிக்கப்பட இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick