தமிழ்ச்சங்க மாநாட்டில் இயற்கை விவசாயம்!

மாநாடுபசுமைக் குழு - படம்: சதீஷ்குமார்

மிழ் மக்களிடம் மரபுசார்ந்த மொழியியல், பண்பாட்டியல், கலையியல், தொல்லியல், உணவியல், மண்ணியல், விவசாயயியல், காலநிலையியல் என அனைத்துக் கூறுகளும் உண்டு. இவற்றைப் பேணிகாத்து, அதைப்பற்றிப் பேசி, விவாதித்துக் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதும், புதுப்பிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. அந்த வகையில் 2018 மே 25, 26, 27 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் (சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை) அருகே உள்ள பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ‘உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு’ நடைபெற உள்ளது. இம்மாநாட்டைப் பசுமை விகடன் இணைந்து வழங்குகிறது.

இதுகுறித்துப் பேசிய உலகத் தமிழ்ச் சங்கங்களின் மாநாட்டு  ஒருங்கிணைப்பாளர் வ.சிவா, “தமிழர் மரபுகளை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் உலகம் முழுவதும் 149 நாடுகள், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து இம்மாநாடு நடைபெற உள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், திரைத்துறை நட்சத்திரங்கள், தமிழார்வலர்கள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் ஒருபகுதியாகப் பொது அரங்கம், ஆய்வரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலையரங்கம், பன்னாட்டு அரங்கம், புத்தகக் கண்காட்சி என நடைபெற உள்ளது.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு என இதுவரை மொழியை அடிப்படையாகக் கொண்டே மாநாடுகள் நடைபெற்றன. இம்முறை தமிழர்களின் விவசாயம், உணவு, கால்நடை, கலைகள் என்று பல அம்சங்களை ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறோம். குறிப்பாக இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் பொருட்டு, பாரம்பர்ய விதைகள் கண்காட்சி, இயற்கை விவசாயக் கண்காட்சி, நாட்டுமாடுகள் கண்காட்சி, பாரம்பர்ய உணவுக் கண்காட்சி, சித்த மருத்துவக் கண்காட்சி உள்ளிட்டவை மாநாட்டின் மற்றொரு பகுதியாக நடைபெற உள்ளது. இதற்காகப் பல்லவன் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் பல ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இயற்கை விவசாயம், பாரம்பர்ய உணவு, சிறுதானிய உணவு, விதைகள் சம்பந்தமான அரங்குகளை அமைக்க ஆர்வமுள்ளோர், எங்கள் அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம். குறைந்த கட்டணத்தில் அரங்குகள் வழங்கப்படும். அரங்குகள் அமைப்போருக்கு மாநாடு நடக்கும் மூன்று நாள்களுக்கும் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்புக்கு,
ஒருங்கிணைப்பாளர்,
அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை,
செல்போன் 88255 36026, 95513 69098, 78678 90890,
மெயில் : utsm2018@gmail.com
வெப்சைட்: www.utsm2018.org

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick