மாடித்தோட்டத்துக்குப் பணம் தேவையில்ல... மனம்தான் முக்கியம்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வீ.நாகமணி

“நகரத்துல இருக்கிற மக்களுக்குப் பெரும்பாலும் காய்கறிகள் இயற்கையா கிடைக்குறது இல்ல. ரசாயன மருந்துகளைப் போட்ட காய்கறிகள்தான் கிடைக்குது. நிலத்துல ரசாயன மருந்தையும், பூச்சிக்கொல்லிகளையும் அடிக்குறப்போ முகத்தைத் துணியால மூடிக்கிட்டுதான் அடிப்பாங்க. அதைச் சுவாசிச்சா மருந்து அடிக்கிறவங்களோட உடலுக்குக் கடுமையான நோய்கள் வந்துடும். முகத்தை மூடிக்கிட்டு அடிக்குற பூச்சிக்கொல்லி விஷத்த தெளிச்ச காய்கறிகளைத்தான், தினம்தோறும் நகரத்துல விற்பனை செய்யுறாங்க. அதை வாங்குற மக்களும் பெரிசா நினைக்குறது இல்லை. அந்தக் காய்கறிகளை உணவா எடுத்துக்கிட்டு உடம்புக்குப் பல நோய்களையும் வாங்கிக்கிறாங்க. இதுக்கு ஒரே தீர்வு நகரவாசிகள் எல்லோரும் மாடித்தோட்டம் அமைக்குறதுதான்” என்று நீண்ட முன்னுரை கொடுத்துப் பேசுகிறார் சித்ரா லட்சுமணன். சென்னை, அண்ணா நகரில் இருக்கிறது, சித்ரா லட்சுமணனின் மாடித்தோட்டம். மாடித்தோட்ட பணிகளில் இருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick