தண்டோரா | Announcements and Meetings - Pasumai Vikatan | பசுமை விகடன்

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

ஆடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் மே 9-ம் தேதி ‘மண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி’, 10-ம் தேதி ‘பலாப்பழத்தில் மதிப்புக்கூட்டிய உணவுப் பொருள்கள் தயாரிப்பு’, 11-ம் தேதி ‘அசோலா உற்பத்தி’, 15-ம் தேதி ‘பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு’, 16-ம் தேதி ‘கோடைக்காலத்தில் ஆடு வளர்ப்பு முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick