மணப்பாறை மிளகாய்... - இயற்கை நுட்பத்தில் செழிப்பான மகசூல்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

ன்றாடச் சமையலில் கட்டாயம் இடம்பிடிக்கும் ஒரு பொருள் மிளகாய். பச்சை மிளகாய், வற்றல் மிளகாய், மிளகாய்ப்பொடி எனப் பலவகைகளில் உணவுத் தயாரிப்பில் பயன்படுகிறது. அதனால், சந்தையில் நல்ல விற்பனை வாய்ப்பு மிளகாய்க்கு உண்டென்றாலும், தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிளகாய்ச் சாகுபடி இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் ஆங்காங்கு சில விவசாயிகள் மிளகாய்ச் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராகத் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டிக்கு அருகில் உள்ள வீரப்புடையான் பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜேம்ஸ் ராஜ், இயற்கை முறையில் மிளகாய்ச் சாகுபடி செய்து சத்தான வருமானம் ஈட்டி வருகிறார்.

ஒரு பகல்பொழுதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஜேம்ஸ் ராஜைச் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick