சிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா! - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்

ருவநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, இடுபொருள் செலவு... எனப் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும்... பெரும்பாலான டெல்டா மாவட்ட விவசாயிகள் வேறு பயிருக்கு மாற முடியாத நிலையில்தான் உள்ளனர். டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாமல், காலங்காலமாக நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் இதேநிலையில்தான் உள்ளனர். இவர்களின் நில அமைப்பும் நெல்லுக்கு ஏற்றதாகவே இருப்பதால், எளிதில் இவர்களால் வேறு பயிருக்கு மாற முடிவதில்லை. இந்நிலையில், ‘நெல் சாகுபடியிலிருந்து விலகாமல், லாபகரமான விவசாயம் செய்ய ஒரே வழி இயற்கை முறையில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வதுதான்’ என்று சொல்லும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன், இரண்டரை ஏக்கர் பரப்பில் 7 வகையான பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து, இப்பகுதி விவசாயிகளிடம் விழிப்பு உணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்