அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
காய்கறி, பழங்களுக்கு அமோகமான ஏற்றுமதி வாய்ப்பு!

விவசாய விளைபொருள்களில் எளிதாக அனுப்பக்கூடியவை, காய்கறிகள் மற்றும் பழங்கள்தான். இதோடு எளிதாக வளரக்கூடியதாகவும், எல்லோருக்கும் தெரிந்தச் சாகுபடி முறையாகவும் இருப்பதால் பலரும் காய்கறி ஏற்றுமதியில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், இந்தியாவில் உள்ள சீதோஷ்ண நிலை, காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதற்கேற்ற வகையில் அமைந்திருப்பதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் இந்தியா, உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதனால், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

2017-18-ம் ஆண்டுக் காலகட்டத்தில் காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதியில்... 9,410 கோடி ரூபாய் புழங்கியுள்ளது. 5,181 கோடி ரூபாய் அளவுக்குக் காய்கறி வர்த்தகமும், 4,229 கோடி ரூபாய்க்குப் பழங்கள் வர்த்தகமும் நடந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick