வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்! | Can grow plants in Buckets and Tyres - Says Terrace garden maker Radha kannan - Pasumai Vikatan | பசுமை விகடன்

வாளி, டயர்களிலும் செடிகள் வளர்க்கலாம்!

வீட்டுக்குள் விவசாயம்

“இந்தச் செடிகள்தாங்க என் உலகம். இந்தச் செடிகளைப் பார்க்காம என்னால ஒருநாள்கூட இருக்க முடியாது. பார்க்காம இருந்ததும் இல்ல. விதை போடுறதுல இருந்து காய்கறி பறிப்பு வரைக்கும் ஒவ்வொரு வேலையையும் குழந்தைக்குப் பண்றது மாதிரி பார்த்து பார்த்துச் செய்றேன்” என்று சிலாகிக்கிறார், சென்னை கே.கே நகரில் வசிக்கும் மாடித்தோட்ட ஆர்வலர் ராதா கண்ணன்.

கணவரின் அலுவலகத்தில், மாடியில் தோட்டம் அமைத்துப் பராமரித்து வரும் ராதா கண்ணனைச் சந்திக்க ஒரு காலை வேளையில் நாம் சென்றிருந்தபோது வாஞ்சையுடன் செடிகளைத் தடவிக்கொடுத்தபடி அவற்றோடு பேசிக் கொண்டிருந்தார், ராதா. பழைய காலணிகள், லாரி டயர்கள், தெர்மாகோல் பெட்டிகள், வாளிகள் என அனைத்துப் பொருள்களிலும் செடிகளை வளர்த்து வருகிறார், ராதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick