“விவசாயம் செய்தால் முன்னேறலாம்...” மொரீஷியஸ் அதிபர் நம்பிக்கை!

நாட்டுநடப்பு

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகம் சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளாக ‘உழவர் களஞ்சியம்’ எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கடந்த அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நான்காவது ஆண்டு உழவர் களஞ்சியம் விழா நடத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பசுமை விகடன் இதழ், நபார்டு ஆகியவற்றுடன் இணைந்து இவ்விழாவை நடத்தியது, வி.ஐ.டி பல்கலைக்கழகம். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், ஆப்பிரிக்க - ஆசிய ஊரக வளர்ச்சித்துறையின் பொதுச்செயலாளர் வஸ்ஃபி ஹஸன் எல்-ஸ்ரிஹின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick