கசடு கழிவு நீர் மேலாண்மைத் திட்டம்! - கலக்கும் கருங்குழி பேரூராட்சி...

சுற்றுச்சூழல்

திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுப்பதற்காக... தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, கிராமந்தோறும் ‘செப்டிக் டேங்க்’ அமைத்துக் கழிப்பறைகள் கட்டித்தரப்படுகின்றன. இப்படி அதிகரித்து வரும் செப்டிக் டேங்க்களில் சேரும் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் வகையில், ‘கசடு கழிவு நீர் மேலாண்மை’ என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கியிருக்கிறது, தமிழக அரசு.

இத்திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள கருங்குழி பேரூராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பேரூராட்சியில் இரண்டாண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு... கடந்த ஆண்டில், கசடு கழிவு நீர் மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுவாக, கழிவு நீர் சுத்திகரிப்புக்குப் பெரிய அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், மிகவும் குறைவான செலவில் இங்கு கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick