வீணாகும் உணவு... இந்தியாவுக்கு முதலிடம்!

#WorldFoodDayநாட்டுநடப்பு

உணவு, உடை, உறைவிடம் மூன்றும் மனிதனின் அத்தியாவசியத் தேவைகள். இதில் முதன்மையானது உணவு. மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் உணவே பிரதானத் தேவை. இந்தியாவில் தினமும் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடிக்கும் அதிகமானோர் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவை வீணடிப்பதைத் தடுக்கவும், பிறருக்கு உதவி செய்யவும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும்  உலக உணவு தினம் (World Food Day) கொண்டுவரப்பட்டது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி உலக உணவு தினம்  கடைப்பிடிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டு ஐ.நா சபையால், கனடாவில் உள்ள கியூபெக் நகரில், உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) நிறுவப்பட்டது. அதன்பின், 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் உலக உணவு தினம் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு வருடமும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick