தண்டோரா | Announcement - Pasumai Vikatan | பசுமை விகடன்

தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

மண்புழு உரம் தயாரிப்பு

சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில், நவம்பர் 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை, ‘லாபகரமான முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம்’, அடுத்த மூன்று நாள்களுக்கு ‘வியாபார ரீதியில் காளான் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு,

செல்போன்: 94438 44651,
04565 250651.


சிறுதானிய ஐஸ்கிரீம்

சென்னையை அடுத்த அலமாதி, கொடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ‘சிறுதானிய ஐஸ்கிரீம், புரத நூடுல்ஸ்,  ஒமேகா-3 சாக்லேட் தயாரித்தல், பழச்சாறு யோகார்ட் தயாரித்தல்...’ போன்ற பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 044 27680214/15.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick