ஏன்... ஏன்? தெரிவோம்... தெளிவோம்! - 5 - பிஞ்சு பிடிக்கும்போது பாசனம் கூடாது!

கேள்வி-பதில்

மா சாகுபடி குறித்த கேள்விகளுக்குக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் கடந்த இதழில் பதில்களைச் சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சி இங்கே...

வடிவம் கொடுப்பதற்காகச் செய்யப்படும் கவாத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?

வடிவம் கொடுப்பதற்காகச் செய்யப்படும் கவாத்தை ‘ட்ரைனிங்’ (Training) என்று சொல்வார்கள். கடந்த இதழில் இது ‘ட்ரிம்மிங்’ என்று தவறாக வெளியாகியுள்ளது. ட்ரைனிங் என்பதுதான் சரி. செடி மூன்றடி உயரத்துக்கு வந்தபிறகு ட்ரைனிங்கைத் தொடங்கலாம். செடியின் மேல் பாகத்தில் இருந்து கீழ் பக்கமாகப் பார்த்துக்கொண்டே வந்து... தண்டின் எந்த இடத்தில் பச்சை நிறம் மறைந்து, பிரவுன் நிறம் தொடங்குகிறதோ அந்த இடத்தில் கவாத்துச் செய்ய வேண்டும்.

தரையில் இருந்து இரண்டு அடிக்கு மேல் கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்து செய்த இடத்தில் பச்சை சாணத்தை வைத்து, காடாத்துணி அல்லது பழைய துணியை வைத்துக் கட்டிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் தண்ணீர் ஆவியாவது குறைக்கப்படும். அதன் பிறகு, கவாத்து செய்த இடத்திலிருந்து ஆறு முதல் எட்டு புதிய கிளைகள் தோன்றும். அதில் முக்கோண வடிவில், தரமான மூன்று கிளைகளை மட்டும் விட்டுட்டு, மற்ற கிளைகளை வெட்டிவிட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick