லாபத்தைக் கூட்டும் கூண்டுமுறை மீன் வளர்ப்பு... ஒரே குளத்தில் நான்கு வகை மீன்கள்!

தொழில்நுட்பம்

ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல, மீன் வளர்ப்பும் விவசாயிகளுக்கு உத்தரவாதமான வருமானம் தரக்கூடிய பண்ணைத் தொழிலாக விளங்கி வருகிறது. இயற்கை இடர்ப்பாடு உள்ளிட்டப் பல காரணங்களால் நெல் போன்ற பயிர்களில் இழப்பு ஏற்பட்டாலும்... அதனை ஈடுசெய்யும் தொழிலாக மீன் வளர்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் குறைந்த தண்ணீரில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீன் வளர்க்க வேண்டியது கட்டாயமாகி வருகிறது. இதற்கு வழிகாட்டி வருகிறது, தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டையில் இயங்கிவரும் ‘வளம்குன்றா நீருயிரிகள் வளர்ப்பு மையம்’. ஒரே குளத்தில் கூண்டுகளுக்குள் திலேப்பியா வகை மீன்களையும் வெளியில் கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மீன்களையும் வளர்க்கும் முறையை விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள், இந்த மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.

வளம்குன்றா நீருயிரிகள் வளர்ப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் ஸ்டீபன் சம்பத்குமாரிடம் இப்புதிய தொழில்நுட்பம் குறித்துப் பேசினோம். “இந்தோனேசியா, சீனா, வியட்நாம், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் கடல்பரப்பில் கடந்த பல ஆண்டுகளாகக் கூண்டில் மீன் வளர்க்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தியாவில், நீர்த்தேக்கங்களில் கூண்டு முறை வளர்ப்பு முயற்சி செய்து பார்க்கப்பட்டபோது, அதிகமாகக் காற்று வீசியதால் அது வெற்றி பெறவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick